Saturday, February 27, 2021

காற்றின் தின்னல் செயற்பாடுகள்

 புவி மேற்பரப்பிலே நடைபெறுகின்ற தின்னல் காரணிகளில் ஒரு பிரதான தின்னல் காரணியாக காற்று விளங்குகின்றது. இந்த காற்றினுடைய செயற்பாடுகள் பூகோள மேற்பரப்பில் பாலைவன பிராந்தியங்களில் அதிகம் இடம்பெறுவதனை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு பாலைவன பிராந்தியங்களில் காற்றினுடைய வேகம் அபரிவிதமாவதற்கு  வெப்பம், அமுக்கம், புவி மேற்பரப்பில் காணப்படுகின்ற தாவரப்போர்வைகளின் அளவு குறைவடைதல்  போன்றன  பிரதான காரணிகளாக திகழ்கின்றது.  

பூகோள பரப்பில் காற்றானது வீசுகின்றபோது அக்காற்றினால் ஏற்படுத்தப்படுகின்ற பிரதான தின்னல் செயற்பாடுகளாக தேய்தல், வாரி இறக்கல், அரைந்து தேய்தல் போன்றன காணப்படுகின்றன. 

காற்றின் தின்னல் செயற்பாடுகள்

பாலைவன பிராந்தியங்களில் காற்று வேகமாக வீசுகின்றபோது அதனது போக்குக்கு குறுக்கே பாறைப்படைத்தளங்கள் எதிர்ப்படும் வேளையில் அக்காற்றானது மிருதுவான சுரண்டல் செயன்முறைகளை ஏற்படுத்தி அப்பாறைகளில் உள்ள மிக நுண்ணிய பருப்பொருட்களை தன்வசம் எடுத்து செல்கின்றபோது அதனை தேய்தல் செயன்முறை என்று அழைத்துக்கொள்ளுவார்கள்.

பாலைவன பிராந்தியங்களில் காற்றினுடைய தொழிற்பாட்டினால் அங்குள்ள மணல் பரப்புக்கள் தளர்வுற்று காணப்படும் வேளை காற்றானது வேகமாக வீசும்போது காற்றினால் தளர்வுற்று காணப்படுகின்ற மணல்பரப்புகள் காற்றின் வீசல் செயற்பாட்டின் பிரகாரம் அம் மட்பரப்புகள் காற்றினால் வாரி இறக்கப்படும் வேளையில் அதனை வாரி இறக்கல் செயன்முறை என அழைப்பார்கள்.

காற்றின் தின்னல் செயற்பாடுகள்

காற்றினால் தேய்தல், வாரி இறக்கல் உள்ளிட்ட பல்வேறுபட்ட செயன்முறைகளின் போது கொண்டுவரப்பட்ட பருப்பொருட்களில் காற்றானது தன்னோடும் தனது தளத்தோடும் அரைந்து தேய்த்து கொண்டு செல்லும். இவ்வாறாக செல்கின்ற தன்மையை அரைந்து தேய்தல் செயன்முறை என அழைப்பார்கள்.


No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...